பயங்கரவாதத்திற்கு எதிராக பிம்ஸ்டெக் நாடுகள் இணைய வேண்டும் என இந்திய வலியுறுத்தல்..!

இலங்கையில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராக பிம்ஸ்டெக் நாடுகள் இணைய வேண்டும் என இந்திய வலியுறுத்தல்..!

இந்த நாடுகளிடையே பொருளாதார  ஒத்துழைப்புக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இலங்கையில் இன்று வரை நடைபெறும் இந்த உச்சி மாநாடு நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் நேரடியாக பங்கேற்றுள்ளனர். 

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார். பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான உச்சி மாநாடு ஆக்கபூர்வமாகவும் ஒத்திசைவாகவும் நிறைவு பெற்றது என்றும்,   வணிக ஒத்துழைப்பு, துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.