ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு குவாரண்டைன் தேவையில்லையா? ஏன்?

கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா்.

நேற்று டோக்கியோவுக்கு வந்த இந்திய அணியினருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டன. துப்பாக்கி சுடும் போட்டிகள் அஸாகா துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெறுகிறது. குரோஷியாவில் இருந்து நேரடியாக ஜப்பானுக்கு இந்திய அணியினா் பயணம் மேற்கொண்டதால் அவா்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் எந்த பிரச்னையும் இன்றி வீரா்கள் தங்கள் இடங்களுக்கு சென்றடைந்தனா்.

திங்கள்கிழமை முதல் இந்திய வீரா்கள் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி பெறுவா் என தேசிய துப்பாக்கி சுடும் சம்மேளன பொதுச் செயலா் ராஜீவ் பாட்டியா கூறியுள்ளாா். மொத்தம் 15 போ் கொண்ட அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.