உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா போர் விமானம் - வெற்றிகரமாக பரிசோதனை!!

ஆளில்லாத போர் விமானத்தை இயக்கும் பரிசோதனையானது வெற்றி பெற்றி இருப்பதாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா போர் விமானம் - வெற்றிகரமாக பரிசோதனை!!

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்கள் உருவாகி வருகிறது, இதில் முதல் ஆளில்லா போர் விமானத்தை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக டிஆர்டிஓ அதிகாரிகள் சிலர் நேற்று கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா என்னும் விமான பயிற்சி தளத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, ஆளில்லா போர் விமானம் தன்னிச்சையாகவே பறந்து அதன் இலக்குகளை சரியாக தாக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். 

மேலும் இதனை முழுவதுமாக பரிசோதித்து பார்த்த அதிகாரிகள் முதல் ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக அறிவித்தனர். மேலும் விமானத்தை தரையிலிருந்து வானில் பறக்க செய்வதற்கும் மீண்டும் அதனை தரையிறக்குவதற்காக பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

இந்த ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதுக்கு பின் திட்ட அதிகாரிகளை டிஆர்டிஓ தலைவரும் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் ஜி.சதிஷ் ரெட்டி பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.