லீவ் போட்டுட்டு...டாடா நிறுவனத்துக்கு இன்டர்வியூ போன இண்டிகோ விமானிகள்...பாதிப்புக்குள்ளான விமான சேவை..!

லீவ் போட்டுட்டு...டாடா நிறுவனத்துக்கு இன்டர்வியூ போன இண்டிகோ விமானிகள்...பாதிப்புக்குள்ளான விமான சேவை..!

உடல்நிலை சரியில்லை எனக்கூறி இண்டிகோ விமான நிறுவனத்தை சார்ந்த விமானிகள் சிலர் விடுமுறை எடுத்து ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு சென்றதால் விமான சேவை பாதிப்பு அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா சூழ்நிலையில் பொருளாதாரத்தின் அடிப்படையில் சில சிக்கல்களை சந்தித்து வந்த இண்டிகோ நிறுவனம் விமானிகளுக்கான ஊதியத்தை குறைத்து வந்தது. இந்த நிலையில் தான் ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம். இதன் பின் விமானிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலை கடந்த சனிக்கிழமை அன்று டாடா நிறுவனம் நடத்தி முடித்துள்ளது. 

ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பல ஆயிரம் கோடி கடன் பிடியில் சிக்கி தவித்து வந்தது. இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நிதி உதவியும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. விமானத்துக்கான எரிபொருள் வாங்கிய தொகையை கூட திருப்பி செலுத்த முடியாத நிலையில் நின்றது ஏர் இந்தியா நிறுவனம். 

இதன் இடையில் உடல் நிலை சரியில்லை எனக்கூறி விடுமுறை எடுத்த இண்டிகோ விமானிகள் சிலர் டாடா நிறுவனம் நடத்திய நேர்காணலில் பங்கேற்று உள்ளனர். இதன் காரணமாக விமான சேவை 55% கடும் பாதிப்புக்குள்ளானது. 

இச்சம்பவத்துக்கு பின்னதாக விமான ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து மத்திய அரசுடன் அலோசனையில் ஈடுபட இருப்பதாக இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.