குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு தாவிய இன்ஃப்ளூயன்சா...!

குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்கு தாவிய இன்ஃப்ளூயன்சா...!

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருந்து வரும் நிலையில், தற்போது பெரியவர்களுக்கும் கண்டறியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை குறி வைத்து தாக்கிய இன்ஃப்ளூயன்சா:

புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், குழந்தைகளிடம் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

வழக்கம் போல் பள்ளிகள் திறப்பு:

தொடர்ந்து, குழந்தைகள் இடையே காய்ச்சல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள விடுமுறையை நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரைக்காத காரணத்தால், திங்கள்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் இயங்க உள்ளது.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

பெரியவர்களையும் தாக்கிய இன்ஃப்ளூயன்சா:

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரியவர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

மேலும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பரிசோதனைகளை தீவிர படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.