’ஆபரேஷன் ஹான்ட்’ கையிலெடுக்கிறதா காங்கிரஸ்!!!!

’ஆபரேஷன் ஹான்ட்’ கையிலெடுக்கிறதா காங்கிரஸ்!!!!

நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார்.  இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட்டணியிலிருந்து விலகி மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்தார்.  பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் சில வட்டார கட்சிகளின் கூட்டிணைவே மகாகத்பந்தன்.

மேலும் படிக்க: வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

பிரிவிற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினர்கள் அதற்கான காரணங்களை கூறியுள்ளனர்.  சோனியா காந்தி ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது  அவரின் உடல்நிலை குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்  தொலைபேசியில் அழைத்து பேசினார் என உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்த சர்ப்பத்தில் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறுவதைக் குறித்து பேசியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து நிதிஷ் ஜூலை மாதத்தின் கடைசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சோனியாவும் நிதிஷும் மகாகத்பந்தன் கூட்டணியின் மறு இணைவை குறித்து அதிக அளவில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

அனைத்தும் திட்டமிட்டப் படியே செயல்படுத்தப்படது என ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவது திடீரென நடந்தது இல்லை எனவும் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்ப்ட்டது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இதையும் படிக்க: நிதிஷின் அரசியல் எதிர்காலம்என்ன?