மீண்டும் மாநில அந்தஸ்தை பெறுகிறதா ஜம்மு காஷ்மீர்?!!!

மீண்டும் மாநில அந்தஸ்தை பெறுகிறதா ஜம்மு காஷ்மீர்?!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் மூலம், நிதி ஆயோக்கிற்கான ஒரு சதவீத தொகை 41 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்த விரிவுரையில், மொத்த வரி வசூலில் 42 சதவீதம் நிதி ஆயோக் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார் நிர்மலா சீதாராமன். 

மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவானதன் மூலம் இந்த சதவீதம் 41 சதவீதமாக குறைந்தது எனவும் இது மீண்டும் 42 சதவீதமாக உயரக்கூடும் எனவும் கூறினார் நிதியமச்சர்.

இதைக் கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநிலமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...!!!