பழங்குடியினர் நிலத்தை பறிக்க முயல்கிறதா மோடி அரசாங்கம்?!!!

பழங்குடியினர் நிலத்தை பறிக்க முயல்கிறதா மோடி அரசாங்கம்?!!!

பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இயற்றிய சட்டங்களை மத்திய பாஜக அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது.  காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த சட்டங்கள் பலப்படுத்தப்படும்.

மகாராஷ்டிராவில்..:

மகாராஷ்டிராவில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ‘இந்திய ஒற்றுமை பயணத்தின்’ கடைசி நாளாகும்.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான்-ஜமோத் என்ற இடத்தில் பழங்குடியின பெண் தொழிலாளர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். 

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள்:

முன்னாள் காங்கிரஸ் தலைவர், பழங்குடியினர் நாட்டின் "முதல் உரிமையாளர்கள்" என்றும், மற்ற குடிமக்களைப் போலவே அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் கூறினார்.  மேலும், பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமை சட்டம், நில உரிமை சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சட்டங்களை மோடி அரசு நீர்த்துப்போகச் செய்கிறது என்று மோடி அரசு மீது குற்றம் சாட்டினார் ராகுல்.

வனவாசி vs பழங்குடியினர்:

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பழங்குடியினரை 'வனவாசியினர்' என்று பிரதமர் மோடி அழைப்பதாகவும், ஆனால் 'பழங்குடியினர்' மற்றும் 'வனவாசி' என்ற வார்த்தைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார். 

மேலும், வனவாசி என்றால் காடுகளில் மட்டுமே வாழ்பவர்கள், அவர்களால் நகரங்களில் வாழ முடியாது என்று கூறிய ராகுல் நீங்கள் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக முடியாது மற்றும் விமானத்தில் பயணம் செய்ய முடியாது.  அதையே பிரதமர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.   அதன் மூலம்​​பழங்குடியினரின் நிலத்தை பறித்து தனது நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்:

மேலும் கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த சட்டங்களை அதிக வலுப்படுத்தி உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை உருவாக்குவோம் எனவும் பழங்குடியினரே நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கூறுவார் என தெரிவித்தார் ராகுல்.  பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டை புரிந்து கொள்ள முடியாது என்று கூறி பேச்சை முடித்தார் ராகுல்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகப் பொருளாதாரத்தில் பின்னடைகிறதா இந்தியா?!!!