நிறுத்தப்படுகிறதா சீனா பொருள்கள் இறக்குமதி...இந்தியாவின் முடிவு என்ன??!!

நிறுத்தப்படுகிறதா சீனா பொருள்கள் இறக்குமதி...இந்தியாவின் முடிவு என்ன??!!

இந்தியா-ஜப்பான் உறவுகள் குறித்து ஜெய்சங்கர் பேசியபோது இருதரப்பு உறவுகளில் 12 விஷயங்கள் குறித்து பேசியதோடு இரு நாடுகளுக்கும் இடையே சாதகமான வரலாறு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

சரியான பதிலடி:

பாகிஸ்தான் குறித்து இந்தியா ஒருபோதும் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கவில்லை என்று கூறிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறிய ஆட்சேபகரமான கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்.  ”இது குறித்து நமது அமைச்சகம் தெளிவான பதிலை வழங்கியுள்ளதாக நான் கருதுகின்றேன்.  கூற வேண்டியதை தெளிவாக கூறிவிட்டோம்.” என கூறியுள்ளார்.

இந்தியா-ஜப்பான் உறவு:

இந்தியா-ஜப்பான் உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருதரப்பு உறவுகளில் 12 விஷயங்கள் குறித்து பேசியதோடு இரு நாடுகளுக்கும் இடையே சாதகமான வரலாறு உள்ளது என்றும் கூறியுள்ளார்.  மேலும் இந்தியாவில் நவீனத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் நல்லிணக்கத்தின் முன்மாதிரியாக ஜப்பான் பார்க்கப்படுகிறது என்று கூறியதோடு ஜப்பான் மாற்றத்தின் முன்னோடியாக இருந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை குறித்து கேள்வியெழுப்பியபோது, “1991ல் உலகளாவிய பொருளாதாரம் திறக்கப்பட்டதில் இருந்து, முந்தைய அரசுகள் நாட்டில் உள்ள சிறு குறு தொழில் துறைகளில் கவனம் செலுத்தாமல், உற்பத்தி துறையை புறக்கணித்து விட்டன.  அதனால் தற்போது வரை சீனாவில் இருந்து இறக்குமதி தேவைப்படுகிறது.  கடந்த சில வருடங்களில் இதைச் செய்யத் தொடங்கியுள்ளோம்.  விரைவில் இது சரிசெய்யப்படும்.  30 வருட வேலைகளை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் முடிக்க முடியாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  இந்தியா பாகிஸ்தானை இணைக்க போகிறதா அமெரிக்கா...எப்படி?!!