டெல்லி சட்டப்பேரவையில் அக்னிபத் - க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்!

டெல்லி சட்டப்பேரவையில் அக்னிபத் - க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்!

இன்று நடைபெறும் டெல்லி சட்டப்பேரவை மழைக்கால சிறப்பு அமர்வில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையின் 2 நாள் மழைக்கால சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து கூட்டம் தொடங்கியவுடன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை கைலாஷ் கெலாட் தாக்கல் செய்யவுள்ளார்.

இதையடுத்து இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்கள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பஞ்சாப் சட்டப்பேரவையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.