குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தங்கர் தேர்வு !!

நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவராக, ஜெகதீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தங்கர் தேர்வு !!

குடியரசு துணைத்தலைவர்

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரான ஜெகதீப் தங்கரும், எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். 

வாக்குப்பதிவு

நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன்சிங்,  சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்

திமுக, அதிமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 543 மக்களவை உறுப்பினர்கள்,  245 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடதக்கது.

ஜெகதீப் தங்கர் வெற்றி

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர்,  அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.