ஜெயலலிதா மரண வழக்கு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை…  

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா மரண வழக்கு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை…   

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கனே 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.