காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு- பயங்கரவாதியை கொன்று பழி தீர்த்த அமெரிக்கா

காபூல் விமான நிலைய தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குண்டுவெடிப்புக்கு காரணமானவனை டிரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 26- ஆம் தேதி, காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐ. எஸ். கோரசான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்கா நேற்று ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஐ. எஸ். கோரசான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தாக்க டிரோன் ஒன்றை அனுப்பியது.

இந்த டிரோன், பயங்கரவாதிகளின் நிலைகள்மீது குண்டுகளை வீசி தாக்கியது. இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு சதிசெய்து, மூளையாக இருந்து நடத்திக்காட்டிய பயங்கரவாதி கொல்லப்பட்டார் என அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.