இந்துக்கள் மட்டும் தான் கடைகள் வைக்கலாம்!- அதிரடி பேனரால் அதிர்ச்சி...

விஸ்வ இந்து பர்சிஷத் சார்பில், இந்துக்களை தவிற வேறு யாருக்கும் கடைகள் வைக்க அனுமடியில்லை என பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்துக்கள் மட்டும் தான் கடைகள் வைக்கலாம்!- அதிரடி பேனரால் அதிர்ச்சி...

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபல குக்கே சுப்பிரமணியா கோவிலில் இந்துக்கள் தவிர்த்து வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழாவின் போது வணிகம் செய்ய அனுமதி இல்லை என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பேனர் வைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து நூதன போராட்டம்...

கடந்த வருடம் திருவிழா காலத்தின் போது மங்களூரு நகரில் உள்ள பல கோவில்களில் இதே போல பேனர் வைக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதை அப்புறப்படுத்தினர். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைத்து மதத்தினரும் திருவிழாவில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | யானை வழித்தடங்கள் அடைப்பு ; ஈஷா யோகா மையத்தின் மீது மனு தாக்கல்... !

இந்த வருடம் குக்கே சுப்பிரமணியா கோவிலில் அடுத்த மாதம் ஆண்டு திருவிழா நடைபெற உள்ள நிலையில் இங்கு முதன் முதலாக இவ்வாறான பேனர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத ரீதியான எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கர்நாடகாவில் தொடர்வதால், ஆட்சியில் இருக்கும் பாஜக-வினர் மீது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க | கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா... நேர்த்திக்கடன் செய்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்...