நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்...

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் வட மாநிலங்களில் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் படைத்து, பாடல்களை பாடி அவரின் அருளை பெறுவர். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு கிருஷ்ணர் அவதரித்த இடமாக போற்றப்படும் மதுராவில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பஜனைகள் பாடி கிருஷ்ணரை வழிபட்டனர்.  

இதேபோல் உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் களை கட்டியுள்ளது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் கிருஷ்ணரை மக்கள் 'ஹரே கிருஷ்ணா' என பஜனை செய்து வழிபட்டனர். புகழ்பெற்ற இஸ்கான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து பூஜைகளில் பங்கேற்றனர்.