மகாராஷ்டிரா: 12 அதிருப்தி எம்.எல்.ஏ-களை பதவி நீக்கம் செய்ய சிவசேனா அரசு முடிவு!!

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் முற்றி வர 12 அதிருப்தி எம்.எல்.ஏ- களை பதவி நீக்கம் செய்ய சிவசேனா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா: 12 அதிருப்தி எம்.எல்.ஏ-களை பதவி நீக்கம் செய்ய சிவசேனா அரசு முடிவு!!

மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ளார்.

இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என மக்களுக்கு கூறி விட்டு முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 12 அதிருப்தி எம்.எல். ஏ-களை பதவி நீக்கம் செய்ய தாக்கரே முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள ஷிண்டே,சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கெல்லாம் எங்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் தங்களுக்கும் சட்டம் தெரியும் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.