மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து, காயமடைந்த இளைஞர்...! சிகிச்சை அளித்து உயிர் பிழைத்த சம்பவம்..!

பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து, காயம்பட்ட 22 வயது இளைஞர்.... ! சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எம்பிஏ மாணவர் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று திங்களன்று போலீசார் தெரிவித்தனர்.

மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து, காயமடைந்த இளைஞர்...!  சிகிச்சை அளித்து உயிர் பிழைத்த சம்பவம்..!

டெல்லி அருகே ஜகத்புரியில் கடந்த ஞாயிறன்று 22 வயது இளைஞர் ஒருவர், மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்ததில் படுகாயமடைந்தார். அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டிருந்தால், அந்த இளைஞர் உயிர் பிழைத்திருக்கமாட்டார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து டிசிபி சத்யசுந்தரம் கூறுகையில், ஜகத்புரி காவல்  நிலையத்திற்கு ஞாயிறன்று மாலை 6.49 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த ழைப்பில், 22 வயது அபினவ் என்ற இளைஞர், மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கண்ணாடி துகள்களால் செய்யப்பட்ட பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், அமேசான் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் டேனிஷ் என்பவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, ​​அபினவ் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் எனவும் “டானிஷின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை" எனவும் கூறியுள்ளார். தற்போது அபினவ் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நிலையான நிலையில் இருக்கிறார்” என்று டிசிபி கூறினார்.