இந்திய மருத்துவ சங்கத்தினருடன்...மன்சுக் மாண்டவியா ஆலோசனை..!

இந்திய மருத்துவ சங்கத்தினருடன்...மன்சுக்  மாண்டவியா ஆலோசனை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தினருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பிஎஃப் 7 வைரஸ்:

சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து அந்நாடுகளில் இருந்து விமானங்களில் வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி:

இருப்பினும், சீனாவில் இருந்து உத்தரப்பிரதேசம் திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து புதிய வகைக் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதையும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த மாற்றம்...தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்!

காணொலிக் காட்சியில் ஆலோசனை:

இந்நிலையில் கொரோனா பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார்நிலை குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே, கொரோனா பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன என்பது தெரியவரும்.