பிரமதரின் வாகனத்தை மறிக்க விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு தான் அறிவுறுத்தியது : மனோகர் லால் கட்டார் குற்றச்சாட்டு!!

பஞ்சாப் அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே விவசாயிகள் பிரதமரின் வாகனத்தை மறித்ததாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரமதரின் வாகனத்தை மறிக்க விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு தான் அறிவுறுத்தியது : மனோகர் லால் கட்டார் குற்றச்சாட்டு!!

பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில் இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. ஆனால் இது பஞ்சாப் அரசின் திட்டமிட்ட சதி என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மோசமான வானிலை காரணமாக மாற்று வழியைத் திட்டமிட வேண்டியிருக்கும் என பஞ்சாப் காவல்துறைக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாமல் பஞ்சாப் காவல் துறை மெத்தனம் காட்டியதாகவும், பஞ்சாப் அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே விவசாயிகள் பிரதமரின் வாகனத்தை மறித்ததாகவும் சாடினார். மேலும் இதன் மூலம் பிரதமரின் உயிருக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.