கர்தார்பூர் குருத்வாரா முன்பு மாடல் அழகி போட்டோஷூட்... பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்... 

சீக்கியர்களின் புனித இடமாக போற்றப்படும் கர்தார்பூர் குருத்வாரா சாஹிப்பில் மாடல் அழகி போட்டோஷூட் செய்த விவகாரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்தார்பூர் குருத்வாரா முன்பு மாடல் அழகி போட்டோஷூட்... பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்... 

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தமது கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்த இடமாக கர்தார்பூரை சீக்கிய பெருமக்கள் தங்களின் புனித தலமாக போற்றுகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு மாடல் அழகி ஒருவர், வெறும் தலையுடன் போட்டோஷூட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது சீக்கிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து புகைப்படங்களை நீங்கிய சௌலேஹா என்ற அந்த மாடல் அழகி மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் குருத்வாரா தர்பார் சாஹிப்பின் புனிதத்தை இழிவுப்படுத்தியதற்காக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.