ட்விட்டரில் சுயவிவர படத்தை மாற்றிய மோடி......

ட்விட்டரில் சுயவிவர படத்தை மாற்றிய மோடி......

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருடைய ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் சுயவிவரப் படத்தில் அவருடைய புகைப்படத்தை நீக்கி விட்டு தேசியக் கொடியை வைத்துள்ளார். 

பிங்காலி வெங்கையா குறித்து:

இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இதை அவர் செய்துள்ளதாக கூறியுள்ளார்.  பிறரையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் இந்திய மக்கள் பெருமிதம் கொள்ளும் மூவர்ணக்கொடியை வழங்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.  மூவர்ணக் கொடியில் இருந்து வலிமையையும் உத்வேகத்தையும் பெற்று, தேசிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹர் திரங்கா பிரச்சாரம்:

“ஹர் கர் திரங்கா” திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் அவர்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் அல்லது காட்சிபடுத்த வேண்டும் என்று மோடி  வலியுறுத்தி வருகிறார். ஆகஸ்ட் 2 முதல் 15 வரையில் மக்களின் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் படமாக இந்தியாவின் தேசியக் கொடியை வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோடி பரிந்துரை:

தேசிய கொடி வடிவமைப்பாளரான வெங்கையாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2 ஆம் தேதியான இன்று  மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் சுயவிவரப் படங்களாக மூவர்ணக் கொடியின் படத்தைப் பயன்படுத்துமாறு மோடி பரிந்துரைத்துள்ளார்.  பரிந்துரை செய்ததோடு நில்லாமல் மோடியும் அவருடைய ஊடக பக்கங்களில் தேசிய கொடியை சுயவிவர படமாக வைத்துள்ளார்.  அவரைத் தொடர்ந்து பாஜக அமைச்சர்களும் முதலமைச்சர்களும் இந்த மாற்றத்தை செய்துள்ளனர்.