”மோடி அரசு 10 நாட்கள், 10 மாதங்கள் மற்றும் 10 ஆண்டுகள்......” இளைஞர்களுடன் உரையாடிய எஸ். ஜெய்சங்கர்!!!

”மோடி அரசு 10 நாட்கள், 10 மாதங்கள் மற்றும் 10 ஆண்டுகள்......” இளைஞர்களுடன் உரையாடிய எஸ். ஜெய்சங்கர்!!!

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் வெளிப்படையான மற்றும் சுறுசுறுப்பான வெளியுறவுக் கொள்கை உலகம் முழுவதும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

வெளியுறதுறை அமைச்சர்:

'இந்தியா முதலில்' என்பது வெளியுறவுத் துறை அமைச்சரது அறிக்கைகளிலும் செயல்களிலும் தெளிவாகத் தெரிகிறது. அகமதாபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து விரிவாகப் பேசினார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இளைஞர்களுடன்...:

வெளிப்படைத் தன்மைக்கும் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கும் பெயர் பெற்ற ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் என்ன செய்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். 

வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் தான் அங்கு என்ன செய்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என்று இளைஞர்களிடம் கூறினார். நான் அல்லது வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டில் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் ஜெய்சங்கர்.  

இரண்டு அம்சங்கள்:

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன, ஒன்று - உலகை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவது மற்றொன்று - உலக நாடுகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்று ஜெய்சங்கர் கூறினார்.  

புதிய கொள்கை:

இந்தியாவின் 10 நாட்கள், 10 மாதங்கள் மற்றும் 10 வருடங்களுக்கான அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தயாராக உள்ளது என்று கூறினார். 

இன்று உலகமே இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். மோடி அரசு 10 நாட்கள், 10 மாதங்கள் மற்றும் 10 ஆண்டுகள் என்ற வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது எனவும் அவை ஒன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் கூறினார் ஜெய்சங்கர்.

மூன்று பரிமாணங்கள்:

வெளியுறவு கொள்கை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளது எனவும் அவை பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மக்கள் எனத் தெரிவித்தார். 

உலகின் முக்கிய கூறுகள்:

இன்றைய உலகின் இரண்டு முக்கிய கூறுகளை குறிப்பிட்டு ஜெய்சங்கர், ஒன்று 'அமெரிக்கா மாறி வருகிறது' மற்றொன்று 'சீனா வளர்ந்து வருகிறது' என்று கூறினார்.  

ரைசிங் சீனா:

இவை இரண்டும் மிக முக்கியமான வளர்ச்சிகள் எனவும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனா பலம் பெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். 

வலுவான அடித்தளம்:

நாட்டில் கோவிட்டினால் பொருளாதார வீழ்ச்சி உக்ரைன் போரினால் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டிற்கு வெளியே உள்ள ஒன்று என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார். 

இது உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் எனவும் புதிய இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி அதை உலகம் அங்கீகரிக்கவும் செய்கிறோம் என்று கூறினார். மாறிவரும் உலகத்திற்கு இந்தியாவை தயார்படுத்த இளம் தலைமுறையினர் உலகில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

                                                                                                                                          -நப்பசலையார் 

இதையும் படிக்க:  அக்னிபாத் வழக்கு இன்று விசாரணை...!!! வீரர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமா?!!