மோடியின் பிரமாண்ட திட்டம்..! தேர்தல் பிரச்சாரத்தில் இதுவரை இல்லாத பேரணி..!

குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதுவரை இல்லாத பேரணியை நடத்தவுள்ளார்.
சாலை பயணம்:
இன்று குஜராத்தில் தொடங்கியுள்ள முதல்கட்ட தேர்தல் வாக்குபதிவு மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று மாலை சாலை மார்க்கமாக 50 கி.மீ பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளார் பிரதமர் மோடி, இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்கம்:
அகமதாபாத்தில் உள்ள நரோதா காமில் பகுதியிலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த பயணம், தக்கர் பாபாநகர், நிகோல், பாபுநகர், அம்ரைவாடி, மணிநகர், டானிலிம்டா, ஜமால்பூர், காடியா, எல்லிஸ்பிரிட்ஜ், வெஜல்பூர், கட்லோடியா, நாரன்புரா, சபர்மதி மற்றும் காந்திநகர் சவுத் சீட் வழியாக சென்று இரவு 9.45 மணிக்கு பயணம் முடிவடைகிறது.. இதற்காக இந்த பகுதிகளில் நேற்று ஒருமுறையும், இன்று காலை மற்றொரு முறையும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம்கட்ட தேர்தல்:
குஜராத்தில் மீதம் உள்ள தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ள டிசம்பர் 3 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காகவே இந்த பேரணி நடத்தப்படவுள்ளது. இது வரை தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொள்ளாத புதிய பிரச்சார முறையை மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி.
இதையும் படிக்க: இனி இப்படி தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா..!!
7 பேரணிகள்:
இன்று நடைபெறும் இந்த பேரணிகளைப் போலவே 7 பேரணிகளை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரங்களை முடித்தபின்னர் டிசம்பர் 5 ஆம் தேதி அகமதாபாத்தின் ராணி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார் மோடி.
28 ஆம் ஆண்டில்..:
27 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்து வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியைக் கைப்பற்ற பெரும் முயற்சி செய்து வருகிறது. படிதார் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்திருப்பது கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருப்பதகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாலை பேரணியும் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் பாஜகவினர்.
காங்கிரஸ் vs ஆம் ஆத்மி:
குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக ஒரு புறம் பேரணி நடத்தவுள்ள நிலையில், ஆம் ஆத்மியிம் இதே போன்ற ஒரு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முறை ஆம் ஆத்மியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் இணையவுள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாபைப் போல குஜராத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் எனகிறனர் அக்கட்சியினர். குஜராத்தில் காங்கிரஸ் கைப்பற்ற வாய்பிருக்கும் 7 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவை விட காங்கிரஸ்க்கு தான் அதிக போட்டியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.