கர்நாடகத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி...காரணம் இதுதானா?

கர்நாடகத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி...காரணம் இதுதானா?

கா்நாடக மாநிலம் துமகூருவில் ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமா் மோடி இன்று திறந்து வைக்கிறாா். 

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் பிரதமா் மோடி இன்று கா்நாடகத்திற்கு வருகை புரிந்து, துமகூருவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்க உள்ளாா்.  தொடர்ந்து, அங்கு 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இந்த தொகுதி வளர கை சின்னத்திற்கு வாக்களிங்கள்...வாக்கு சேகரிப்பில் பேசிய எ.வ.வேலு!

முன்னதாக அவா் பெங்களூரு - துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு செல்கிறாா். பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.