ஜூலை 19 ஆம் தேதி  நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்... கேள்வி எழுப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்...

ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் பரிந்துரை செய்து இருந்த நிலையில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 19 ஆம் தேதி  நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்... கேள்வி எழுப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்...
இந்தியாவில் கொரோனா முதல் அலையின் காரணமாக 2020ம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நாட்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமலே முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் கருதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதங்கள் 2 அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவையும் ஒத்திவைக்கப்பட்டது.
 
அதன் பின் இரண்டாம் அலையின் தாக்கம் , அவற்றினால் ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு , இவற்றிற்கு மத்தியில் தனி மனித பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்பு, பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் என நாட்டின் பல பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டது. இந்நிலையில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கவுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் போது நாட்டின் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.