மும்பை பங்கு சந்தை ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

மும்பை பங்கு சந்தை ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

மும்பை பங்கு சந்தை வார வர்த்தக தொடக்க நாளான இன்று ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 536 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 766 புள்ளிகளில் வணிகமாகிறது. இதேபோல் தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 440 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வணிகமாகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 440 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 760 என வர்த்தகமாகிறது. இதில் IT, Realty, PSU வங்கி, ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை சேர்ந்த பங்குகள் 2 முதல் 3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளனர்.