அம்பானி குடும்பத்திற்கு 3 மணி நேரம்.. கெடு வைத்த மர்ம நபர்கள்.. ஒருவர் கைது?

75-வது சுதந்திர தினத்தை மனைவி மற்றும் பேரனுடன் கொண்டாடிய முகேஷ் அம்பானி..!

அம்பானி குடும்பத்திற்கு 3 மணி நேரம்.. கெடு வைத்த மர்ம நபர்கள்.. ஒருவர் கைது?

முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு கெடு வைத்த மர்ம நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அம்பானி: இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபரும் இவர் தான். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு மவுசு இருக்கிறதோ அதே அளவு முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் முகேஷ் அம்பானி தனது பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார். தனக்கு பிறகு தன்னுடைய மகன்களுக்கு பிசினஸின் பொறுப்புகளை கொடுத்து விட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் முகேஷ் அம்பானி. 

குடும்பத்தோடு சுதந்திர தினக் கொண்டாட்டம்: இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முகேஷ் அம்பானி தனது மனைவி நீட்டா அம்பானி மற்றும் பேரன் பிரித்வி அம்பானியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார். பேரனுடன் சேர்ந்து இசைக்கேற்ப கொடியை அசைத்து மூவரும் சுதந்திர தினத்தை கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கொலை மிரட்டல்: இந்த நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு காலை 10.30 மணியளவில் தொலைப்பேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம ஆசாமி அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை 3 மணி நேரத்தில் கொலை செய்யவுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து இதே போல 8 முறை அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. 

ஒருவர் கைது?: இது குறித்து டிபி மார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் மருத்துவமனைக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் காரணமாக அம்பானியின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு வெடிபொருட்களுடன் கார்: கடந்த 2021-ம் ஆண்டு மும்பையில் உள்ளது அம்பானியின் வீடான அண்டலியா முன்பு வெடி பொருட்களுடன் கார் ஒன்று மர்மமான முறையில் நின்றுள்ளது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில், அது தொழிலதிபர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில், மான்சுக் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.