அடுத்து புதுச்சேரி..! பாஜகவுடன் விரிசலில் என்.ஆர்.காங்கிரஸ்..! சட்டசபையில் நடந்தது என்ன?

அடுத்து புதுச்சேரி..! பாஜகவுடன் விரிசலில் என்.ஆர்.காங்கிரஸ்..! சட்டசபையில் நடந்தது என்ன?

புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. 

பாஜக vs கூட்டணி கட்சி:

பல மாநிலங்களில் மத்திய ஆளும் பாஜகவிற்கும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வரும் ஒன்றாகியுள்ளது. மேலும் பல மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும், ஆளுநர்களுக்குமான மோதல் என்பதும் தொடர்கதையாகி வருகிறது. புதுச்சேரியில் தற்போது கூட்டணி கட்சியாக உள்ள ஏன்.ஆர்.காங்கிரசுக்கும், பாஜக எம்.எல்.ஏக்களுக்கும் மோதல் என்பது வெளிப்பட்டுள்ளது.
 
பட்ஜெட் கூட்டத்தொடர்:

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கடந்த மூன்று தினங்களாக பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க : 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு... எப்படி எதிர்க்கொள்ள போகிறார் ஓ.பி.எஸ்!

பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றசாட்டு:

நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன், தனக்கு தெரியாமலேயே தன்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதாகவும், தான் பாஜகவை ஆதரிப்பதால் அரசு இப்படி செய்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாசும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். 

கூட்டணியில் விரிசல்:

அதன் பின்னர் சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், 
நாங்கள் தான் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளோம்,  அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆனால் பாஜக எம்.எல்.ஏ தொகுதியை அரசு புறக்கணிக்கிறது என குற்றம்சாட்டினார். 

கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே சட்டசபையில் அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.