நடிகர் ஷாரூக் கான் வீட்டிற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை

நடிகர் ஷாரூக் கான் வீட்டிற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை

சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

இந்நிலையில் கிட்டதட்ட 14 நாட்களுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவிதித்து வரும் மகன் ஆர்யன் கானை ஷாருக்கான் இன்று காலை மும்பை சிறையில் நேரில் சென்று பார்த்தார். இந்தநிலையில் மும்பை பாந்ரா பகுதியில் உள்ள ஷாருக்கானின் பங்களாவில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆர்யன் கானின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் நடிகை அனன்யா பாண்டே-வுடன் போதை பொருள் தொடர்பாக சில குறுஞ் செய்திகள் பறிமாறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே-வை இன்று போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் அவரது வீட்டிலும் தற்போது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.