நீட் தேர்வை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை - மத்திய அரசு தகவல்

நீட் தேர்வை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை - மத்திய அரசு தகவல்

நீட் தேர்வை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று கூறினார். 
இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுகள், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகள் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு எழுதும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வின் போது சமூக இடைவெளி , முகக் கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக கடைபிடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களுக்கு முழு முகக் கவசம் வழங்கப்படும் என்றும், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அறைக்கும் மாணவர்கள் தனித் தனியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.