வாட்ஸ்அப், ஜூம் செயலிகளுக்கு புதிய மசோதா..! 

வாட்ஸ்அப், ஜூம் செயலிகளுக்கு புதிய மசோதா..! 

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ  போன்ற இணைய அழைப்பு சேவை வழங்கும் செயலிகளுக்கு புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. 

தொலைத்தொடர்பு மசோதா-2022

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், இதுதொடர்பாக புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி, மக்களின் கருத்துக்களை கேட்க இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக அக்டோபர் 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது வலைதள பக்கம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார். 

இயங்குவதற்கு உரிமம்:

அதில் ஓ.டி.டி. நிறுவனங்களான வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ ஆகியன இணைய அழைப்பு மற்றும் இணைய செய்தி அனுப்பும் சேவைகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஓ.டி.டி, தொலைத்தொடர்பு சேவைகள் வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ தங்களது உரிமத்தை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் கட்டணம் திருப்பித்தரப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்க: போர், பழிவாங்குதல்..! மோடியின் கருத்துக்கு குவியும் உலக தலைவர்களின் ஆதரவு..! 

கட்டணங்கள்:

இந்த நிறுவனங்களஇன் நுழைவு கட்டணம், உரிம கட்டணம், பதிவு கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம், வட்டி ஆகியவற்றை பகுதி அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் இந்தியாவில் வெளியிடுவதற்காக அளித்த பத்திரிகை செய்திகள், இடைமறித்து ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 

ஆனால், தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இந்த விலக்கு பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.