ஆய்வில் இப்படி ஒரு தகவலா? அசத்திய தமிழகம்… பாராட்டிய கட்கரி!

தமிழகத்தில் சாலை விபத்துக்களையும், சாலை மரணங்களையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை எட்டியதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து காணொலி கருத்தரங்கில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார். 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு எனவும் விரைவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, மரணத்தை 50 சதவீதம் குறைத்துவிடுவோம் அதை நிறைவேற்றுவோம் என்றார். மேலும். தாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழ்நாடு மாநிலம் மட்டும் ஏற்கெனவே அடைந்துவிட்டது என பாராட்டு தெரிவித்தார்.