8 வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்..!

8 வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்..!

பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் 8-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். பாட்னாவில் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் நிதிஷ்குமாருக்கு, ஆளுநர் பகு செளஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பாஜகவின் மறைமுகமான சதிவேலை:

பீகாரில் கடந்த சில மாதங்களாகவே முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும், அவருடன் கூட்டணி வைத்திருந்த பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. நிதிஷ் குமாரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க பாஜக திரைமறைவு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் எதிரொலித்தது.

பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட நிதிஷ்:

இதையடுத்து நேற்று தனது வீட்டில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்தார். மேலும் முன்னாள் கூட்டாளியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தெளிவுப்படுத்தினார். இதனை அனைவரும் ஆமோதித்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதல் கடிதத்துடன் புதிய கூட்டணி ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் ஆளுநரை சந்தித்தார்.

முதலமைச்சராக பதவியேற்பு:

இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் 8-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் நிதிஷ்குமாருக்கு, ஆளுநர் பகு செளஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.