இந்தியாவிற்கு 5ஜி அலைக்கற்றை வேண்டாம்.... நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை

5ஜி அலைக்கற்றையை இந்தியாவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா.

இந்தியாவிற்கு  5ஜி அலைக்கற்றை வேண்டாம்.... நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை

இந்தியின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜூஹி சர்வலா. தமிழில் 1991-ல் ரஜினி நடித்த நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தார். 

இப்போதும் இந்திப் படங்களில் நடிக்கிறார். இவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் என்று கூறப்படுகிறது.  5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

4ஜி அலைக்கற்றையைவிட 5ஜி அலைக்கற்றையின் கதிர்வீச்சு 100 மடங்கு அதிகம், அதனால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். 

Happy Birthday Juhi Chawla: 5 wonderful performances of the vivacious  actress that you can't miss | Celebrities News – India TV

எனவே அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி டவர்கள் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து போனதாக ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.

ஆனால், அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில், இதை வைத்தே 2.0 படத்தை எடுத்தார் ஷங்கர். இப்போது ஜூஹி சாவ்லா அதே குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.