ஒமிக்ரான் பாதிப்பு பிப்ரவரியில் உச்சத்தை தொடும்... அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்...

இந்தியாவில் ஒரே நாளில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு பிப்ரவரியில் உச்சத்தை தொடும்... அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்...

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதன் மூலம், நாட்டில் அடியெடுத்து வைத்தது.   இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, தமிழகம் என வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதித்தவர்களில் 114 பேர் குணம் அடைந்துள்ளனர்.  நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38- பேருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பிப்ரவரி 3-ந் தேதியில் இருந்து உச்சம் தொடும் என கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.