கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரதமர் மோடி..? மத்திய அமைச்சரவையின் புதிய மாற்றங்கள் என்னென்ன..?

மத்திய அமைச்சரவையின் புதிய மாற்றங்கள் என்னென்ன..?

கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரதமர் மோடி..? மத்திய அமைச்சரவையின் புதிய மாற்றங்கள் என்னென்ன..?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதவியில் இருக்கும் ஒருசில அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்கா வழங்கப்பட்டு, ஒருசிலருக்கு இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன.
 
ஹர்ஷ வர்தன் ராஜினாமா செய்த நிலையில், அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உரம் மற்றும் ரசாயனத் துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
 
ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சரான நாராயண் ரானேவுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.
 
துறைமுகம் மற்றும் கப்பல் ஆயுஷ் துறை, முன்னாள் அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 
மத்தியப்பிரதேச எம்.பி. வீரேந்திர குமாருக்கு சமூக நீதி மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
 
ராஜ்குமார் சிங்கிற்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக ஹர்தீப் சிங் புரி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அனுராக் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், பிரதமர் மோடி ஏற்கனவே உள்ள துறைகளுடன் கூடுதலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையையும் கவனிக்க உள்ளார்.
 
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக கூட்டுறவுத் துறை அளிக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கூடுதலாக தூய்மை இந்தியா திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தர்மேந்திர பிரதானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
பியூஷ் கோயலுக்கு ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.