பிரதமர் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட திட்டம்…  

பிரதமர் பிறந்தநாளான நேற்று ஒரே நாளில் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு புதிய சாதனை புரிந்துள்ளது.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று நாடு முழுவதும் பா.ஜ,க.வினர் விமர்சியாக கொண்டாடினர். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பா.ஜ.க, திட்டமிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று துவங்கப்பட்ட இந்த திட்டம் அக்டோபர் 7 வரை செயல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் நேற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த துவங்கியது முதல் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வெறும் 6 மணிநேரத்தில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுக்க  2 கோடியே 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சமாக இருந்தது.