ஜமைக்கா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை வலுப்படுத்த - குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அரசுமுறை பயணம்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாள் பயணமாக ஜமைக்கா புறப்பட்டு சென்றார்.

ஜமைக்கா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை வலுப்படுத்த - குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அரசுமுறை பயணம்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் ஜமைக்காவில் தங்க உள்ள அவர், அந்நாட்டு ஆளுநர் சர் பேட்ரிக் ஆலனை சந்தித்து பேசுகிறார்.

ஜமைக்கா இந்தியா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜமைக்கா பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 18 ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

கரீபியன் நாடுகளுக்கு இந்தியத் தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.