இளைஞர்கள் விண்வெளி துறையிலும் கவனம் செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்...

இளைஞர்கள் புதிய லட்சியங்களுடன் பயணத்தை தொடர்வதுடன் , விண்வெளி துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இளைஞர்கள்  விண்வெளி துறையிலும் கவனம் செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்...

பிரதமர் மோடி மன்கிபாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மாதம் தோறும் இறுதி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே உரையாடி வருகிறார். அந்தவகையில் வானொலி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்ட 80வது மன்கிபாத் நிகழ்ச்சியில், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்திற்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

அவரது பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுவதை குறிப்பிட்ட அவர்,  ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியிருந்த ஹாக்கி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.இளைஞர்கள் புதிய லட்சியங்களுடன் பயணத்தை தொடர வேண்டும் என குறிப்பிட்ட மோடி, கிராமங்கள், நகரங்களில் உள்ள விளையாட்டு திடல்களும் வீரர்களால் நிரம்பும் வகையில், இத்துறையில் இந்தியா புதிய உச்சம் பெற வேண்டும் என வாழ்த்தினார்.

தண்ணீர் தட்டுப்பாடற்ற நகரமாக திகழும்  மத்திய பிரதேசத்தின்  இந்தூர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதல் நகரமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, குஜராத்தில் ஒளிப்பரப்படும் ரேடியோ யூனிட்டி 90 எப்எம்-ல் ஆர்ஜே வாக இருப்போரை பாராட்டி பேசினார். மேலும் சமஸ்கிருத மொழியில் நேயர்களுடன் உரையாடி, மொழிதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.