குஜராத்தை குஜராத்தாக மாற்றிய பிரதமர் மோடி!!!

குஜராத்தை குஜராத்தாக மாற்றிய பிரதமர் மோடி!!!

குஜராத் மாநிலத்தை அவமரியாதை செய்யும் வகையில் கடந்த 20 ஆண்டுகளை செலவிட்ட பிரிவினைவாத சக்திகளை குஜராத் துடைத்தழிக்கும்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மோடி:

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.  சாலையில் வாகனத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களுடன் பேசினார். அப்போது அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் இருந்தார். 

பொறுப்புடன் செயல்படும் இளைஞர்கள்:

குஜராத் இளைஞர்கள் இப்போது பொறுப்பை உணர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகின்றனர் எனவும் பேசினார் பிரதமர் மோடி.  

எதிர்க்கட்சிகளை எச்சரித்த மோடி:

மேலும் குஜராத்தில் வெறுப்பை பரப்புபவர்கள் ஒருபோதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் சிலர் குஜராத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கு  குஜராத் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார் பிரதமர்.

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு குஜராத்தில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தை அவதூறு செய்யும் வகையில் கடந்த 20 ஆண்டுகளை செலவிட்ட பிரிவினைவாத சக்திகளை குஜராத் துடைத்தழிக்கும் என்று கூறினார். 

ஆசியுடன் கூடிய அதிர்ஷ்டம்:

தொடர்ந்து பேசிய மோடி குஜராத்தில் உள்ள எனது பழங்குடியின சகோதரர்களின் ஆசியுடன் எனது பேரணியைத் தொடங்குவது எனது அதிர்ஷ்டம் எனக் கூறினார்.  மேலும், இந்த முறை குஜராத் என்னை வென்று சாதனை படைக்க போகிறது எனவும் தெரிவித்தார்.  

நான் இதை குஜராத்தாக்கி விட்டேன்:

அதனுடன் ஒரு புதிய முழக்கத்தையும் அளித்தார் பிரதமர் மோடி.  அதாவது குஜராத்தியில் புதிய தேர்தல் முழக்கத்தை அளித்தார் பிரதமர் மோடி.   ”நான் இதை குஜராத்தாக்கிவிட்டேன்” எனக் கூறி குஜராத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.  

மேலும், ”ஒவ்வொரு குஜராத்தியும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் எனவே குஜராத்திகள் பேசும்போது அவர்களுக்குள்ளிருந்து ஒரு குரல் எழுகிறது - அவர்கள் இந்த குஜராத்தை உருவாக்கியுள்ளனர்.” எனக் கூறி அவரது உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    மீண்டும் மாநில அந்தஸ்தை பெறுகிறதா ஜம்மு காஷ்மீர்?!!!