புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கௌதம புத்தரின் பிறந்த தினமான இந்த நன்னாளில் அவரது கொள்கைகளை நினைவு கூர்வோம் என்றும், அதனை நம் வாழ்க்கையில் கடைபிடித்து நிறைவேற்றுவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

புத்தபெருமானின் சிந்தனைகள் பூமியை அமைதியானதாகவும், இணக்கமானதாகவும், நிலையானதாகவும் மாற்றும் என்றும் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.