பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் - திரவுபதி முர்மு!

குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் -  திரவுபதி முர்மு!

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள திரௌபதி முர்மு   இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை தேர்வு செய்ததற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருப்பதாக பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார். அடிப்படை பிரச்னை பற்றிய திரௌபதி முர்முவின் புரிதல், நாட்டின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்புக்குரியது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


இதை  தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் திரிவுபதி முர்மு சந்தித்து பூங்கொத்து  கொடுத்து நன்றி தெரிவித்தார். டெல்லியில்  இந்த சந்திப்பு  நடைபெற்றது.