ஒரே விமானத்தில் பயணித்த பிரியங்கா, அகிலேஷ்... தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனையா..?

ஒரே விமானத்தில் சக பயணிகளாக பயணித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும்.

ஒரே விமானத்தில் பயணித்த பிரியங்கா, அகிலேஷ்... தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனையா..?

ஒரே விமானத்தில் சக பயணிகளாக பயணித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் குறித்து விமானத்தில் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்து லக்னோ புறப்பட்ட விமானத்தில் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒன்றாக பயணித்துள்ளனர். அப்போது மரியாதை நிமித்தமாக ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலன் விசாரித்து கொண்ட நிலையில் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் பாஜக-வை வீழ்த்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.