உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி... பொதுத் தேர்வுகளை ரத்து செய்த ஆந்திர அரசு...
உச்சநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலியாக ஆந்திராவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மொழி மற்றும் சட்டத்தின் எளிமை ஆகியவை நீதி வழங்கும் முறையின் மறுபகுதி என்றும் அதைப் பற்றி நாம் இன்றளவும் அதிகம் பேசவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அறிவியல் மையத்தில் இந்திய வழக்கறிஞர்கள் கழகத்தின் சார்பில் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மேடி தொடங்கி வைத்தார். அப்போது, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாடு பல்வேறு வரலாற்று அடிகளை எடுத்து வைக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா, இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புதிய திசை மற்றும் சக்தியை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சுதந்திர போராட்டத்தின் போது பல வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை விட்டு விடுதலை இயக்கத்தில் இணைந்து போராடியதை நினைவு கூர்ந்த பிரதமர், பாரத நாட்டின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கைக்கு பாரதத்தின் சுதந்திரமான நீதித்துறை முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
எந்த ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் சட்டத்தின் பங்கு முக்கியம் என்று கூறிய பிரதமர், நீதித் துறை மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவின் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களாக இருந்து வருவதாக கூறினார்.
இதையும் படிக்க: கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது 20 கிலோ; கஞ்சா பறிமுதல்!
கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இன்று முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரம், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது என்று கூறி 3 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், விசாரணை மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை கார்நாடக அரசு ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. கர்நாடக அரசு சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுக்கள், நீதிபதிகள், பி.ஆர்.
கவாய், பி. எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, இருதரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடாக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவதை எதிர்த்து மாண்டியா மாவட்ட விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க || காவிரி விவகாரம்: "காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, பேரவை, மாநகராட்சி, பஞ்சாயத்து தோ்தல்களை நடத்தும் மத்திய பாஜக அரசின் கனவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆராய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்பட 8 போ் குழுவை மத்திய அரசு செப்டம்பா் 2-ம் தேதி அமைத்தது. முன்னாள் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. முதல் முறையாக கூடும் இந்தக் கூட்டம் அறிமுக கூட்டமாக இருக்கும் எனவும், இந்தக் குழுவின் வருங்கால செயல்திட்டம் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடா்பாக யாரை அழைத்து ஆலோசனை பெற்று விரிவான அறிக்கையை தயாரிக்கலாம் என ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். இந்தத் திருத்தங்களை குறைந்தது 50 சதவீத பேரவைகள் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்
மகளிர் இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினரை பிரதமர் புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, 2010ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு 100 சதவீதம் வருந்துவதாகக் கூறினார். மக்கள்தொகை கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயம் முடிந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலுக்கு வரும் என யாருக்கும் தெரியாது எனவும் எந்த சிக்கலுமின்றி பாஜக அரசால் இன்றே இடஒதுக்கீட்டை வழங்க முடியும் எனவும் அவர் விமர்சித்தார்.
மசோதாவை இன்று பேசுபொருளாக்கி, 10 ஆண்டுகளுக்குப்பின் அமல்படுத்துவதன் மூலம் மகளிரை பாஜக அரசு அவமதிப்பதாக கூறிய அவர், மக்களை திசைத் திருப்புவதற்கான ஒரு தந்திரமே இந்த 33 சதவீத இடஒதுக்கீடு எனவும் ராகுல்காந்தி விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசி அவர், இந்திய செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓ.பி. சி பிரிவினர் என குற்றம்சாட்டிய அவர், நாள்தோறும் ஓ.பி.சி பற்றி பேசும் பிரதமர் அவர்களுக்காக என்ன செய்தார் எனவும் கேள்வியெழுப்பினார்.
மகளிர் இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினரை பிரதமர் புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி சாதிவாரி கண்கெடுப்புடன் சேர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2024ம் ஆண்டு தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: சென்னையை பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது!
41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்துள்ளார் கிறிஸ்தவ பாதிரியார் மனோஜ்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சார்ந்தவர் மனோஜ். கல்லூரி படிப்பை முடித்து பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையே ஆன்மீக சிந்தனை மேலோங்கி 2015 ஆம் ஆண்டு பாதிரியார் பட்டப்படிப்புக்காக ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்து படித்து முடித்து பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையே அனைத்து மதங்களையும் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையில் இந்து சமயம் குறித்து அறிய சபரிமலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி முதல் விரதம் இருந்து செப்டம்பர் 5ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று சபரிமலைக்கு செல்ல மாலை போட்டார். இந்த செய்தியை வெளியே தெரிய தொடங்கியதும் தேவாலய சபைக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. பின்பு பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து சபை உறுப்பினர் அடையாள அட்டை, பாதிரியார் அட்டை உள்ளிட்டவை சபை நிர்வாகத்துடன் திருப்பி ஒப்படைத்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திருமலை கோவிலில் வைத்து ஆஜாரங்கள் படி இருமுடி கட்டி - கருப்பு உடை அணிந்து புறப்பட்டு சென்று இன்று சபரிமலை சன்னிதானத்திற்கு சென்று ஐயப்பனை தரிசித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மதங்கள் - நம்பிக்கைகள் தான் பல - ஆனால் கடவுள் ஒன்று தான் என்பதை நான் மக்களுக்கு இதன் மூலம் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் என்றும் கூறுகிறார்.
இதையும் படிக்க || "உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு நாங்கள் மகிழ்ச்சி அடைக்கிறோம்" அமைச்சர் துரைமுருகன்!!