புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய ஆக. 26 கூடுகிறது சட்டப்பேரவை!  

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை வரும்  26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய ஆக. 26 கூடுகிறது சட்டப்பேரவை!   

புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை வரும்  26 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி புதுச்சேரியில் அமலுக்கு வந்தது, இதனால் புதுச்சேரி மாநிலத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவர் தாக்கல் செய்த பட்ஜெட் ஆகஸ்ட் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில், வருகின்ற மாத செலவினங்களுக்காக புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதலமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரியில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும்  26 ஆம் தேதி சட்டப்பேரவை கூட இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உரையுடன் வரும் 26ஆம் தேதி கூட உள்ளதாகவும், அன்றைய தினம் மாலை சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்தலும் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.