புதிய தடுப்பூசி கொள்முதல் .... பயாலஜிக்கல் இ நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம்...

பயாலஜிக்கல் இ நிறுவனத்துடன் 30 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய தடுப்பூசி கொள்முதல் .... பயாலஜிக்கல் இ நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம்...

நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 216 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிகளவிலும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறைந்தளவிலும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த ’பயாலஜிக்கல் இ’ நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

இந்தத் தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது 3ஆம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ’பயாலஜிக்கல் இ’ தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களை கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசு.

மேலும் அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆயிரத்து 500 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க உள்ளது. இந்த தடுப்பூசியை வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் தயாரித்து வழங்க பயாலஜிக்கல்- இ நிறுவனம் முடிவு செய்துள்ளது.