அனைவரும் இந்துக்கள்...! சலசலப்பை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்தின் பேச்சு..!

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் இந்துக்கள் தான்:
பீகாரில் ஆர்எ.ஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மோகன் பகவத், "இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் இந்துக்கள்தான். வெவ்வேறு நிலப்பகுதிகளில் உள்ள வெவ்வேறு கலாச்சார பண்பாட்டின் காரணமாக நாட்டில் பன்முகத்தன்மை செழித்திருக்கிறது. இந்துக்கள் என்பவர்கள் பாரத மாதாவை புகழ்ந்து சமஸ்கிருத வசனங்களைப் பாட ஒப்புக்கொண்டு நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பவர்களாவார்கள். இவர்கள்தான் இந்துக்கள். இவர்களுக்காகவே ஆர்.எஸ்.எஸ் தன்னலமற்ற சேவைகளை செய்துகொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இணைந்த கைகள்..! சீமானும், சவுக்கு சங்கரும்..! உதயநிதியை வீழ்த்த வியூகம்..!
இந்து மதம்:
மேலும், இந்து நாட்டில் வசிப்பவர்கள் வேறு பிரிவுகளில் கூட இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் தோற்றம் இந்து மதம்தான். இந்துத்துவா என்பது நூறாண்டுக்கால பழமை வாய்ந்தது. தற்போது அதிலிருந்து பிரிந்தவைதான் மற்றவைகள். இவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கலாம். ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் இருக்கலாம். ஆனால் இவைகள் அனைத்தும் தங்களது தோற்றத்திற்காக இந்து மதத்திற்கு கடன்பட்டுள்ளன எனக் கூறியவர்,
இந்துத்துவா:
பிறரிடம் தன்னை பார்ப்பது, பெண்களை காம பொருளாக பார்க்காமல் தயாக பார்ப்பது, பிறரின் செல்வத்திற்கு ஆசைப்படாமல் இருப்பதையே இந்து மதம் வலியுறுத்துகிறது. ஆக இந்துத்துவா என்பது ஒரு பிணைப்பு சக்தி. தங்களை இந்துக்கள் என்று நம்புவோர்கள் அனைவரும் இந்துக்கள்தான் என பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் கூறியுள்ள நிலையில், மோகன் பகவத் இவ்வாறு பேசியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.