டிஆர்எஸ்க்கும் காங்கிரஸ்ஸுக்கும் இடையேயான கூட்டணி குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த ராகுல்....!!!

டிஆர்எஸ்க்கும் காங்கிரஸ்ஸுக்கும் இடையேயான கூட்டணி குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த ராகுல்....!!!

நீதித்துறை, நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்வோம். 

பாஜகவின் பிடியிலிருந்து..:

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  நீதித்துறை, நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்வோம்.” என்று கூறியுள்ளார்.

சர்வாதிகாரம்:

”காங்கிரஸ் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி என்பதால், சமீபத்தில் எங்கள் கட்சியின் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் சர்வாதிகாரம் செய்யவில்லை.” எனவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தொடர்பு இல்லை:
 
தெலுங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான உறவு குறித்த கேள்விக்கு, ”இரு கட்சிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை.  தெலுங்கானா முதலமைச்சர் தேசிய கட்சி நடத்துவதாக நம்புகிறார்.  அவரது சிந்தனை வரவேற்கத்தக்கது.  சர்வதேச கட்சியை நடத்துவதாகவும் அவர் நினைக்கலாம்.” எனக் கிண்டல் கலந்த பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன்” சுப்பிரமணியன் சுவாமி கூற காரணம் என்ன?! யார் அந்த ஹரேன் பாண்டியா?!!