நாட்டில் வன்முறை நிறைந்த சூழல் நிலவுகிறது : பிரதமர் மோடியின் முன்பே விமர்சனம் செய்த முதலமைச்சர்!!

நாட்டில் பதற்றம் மற்றும் வன்முறை நிறைந்த சூழல் நிலவுவதாக மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வன்முறை நிறைந்த சூழல் நிலவுகிறது : பிரதமர் மோடியின் முன்பே விமர்சனம் செய்த முதலமைச்சர்!!

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவில் இருந்து பொன் இந்தியாவை நோக்கி எனும் தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது காணொலியில் பேசிய ராஜஸ்தான்  முதல்வர் அசோக் கெலாட், நாட்டில் பதற்றம் மற்றும் வன்முறை நிறைந்த சூழல் நிலவுவதாகவும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் எனவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், நாட்டின் நிலை குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.