மறு சுழற்சி செய்யப்படும் தங்கம் - சர்வதேச அளவில் இந்தியாவுக்கு 4 - வது இடம்!

மறு சுழற்சி செய்யப்படும் தங்கம் - சர்வதேச அளவில் இந்தியாவுக்கு 4 - வது இடம்!

இந்தியா்களின் மிக விருப்பமான உலோகமாகத் தங்கம் தொடா்ந்து சர்வதேச அளவில் நான்காவது இடத்திலேயே நீடித்து வருகிறது.

அழகு சோ்க்கும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல் எதிா்காலத்துக்கான சேமிப்பாக முதலீட்டு நோக்கிலும் தங்கத்தை இந்தியா்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

அதன் காரணமாக தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்க ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.